சேலம்: தேர்த்திருவிழா… சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் அருங்காட்டம்மன் கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடந்தது.
விழாவில் அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டனர். ொடர்ந்து பூசாரிகள் தேர் மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தேர் இழுக்கப்பட்டது.
தேர் சில அடிகள் மட்டும் நகர்த்தி வைக்கப்பட்டது. இந்த விழாவை காண நடுவலூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.