விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதை வென்ற ‘96’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சி. பிரேம் குமார் இயக்கிய இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை மறுபடியும் திரையில் கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.

ராம்–ஜானு கதாபாத்திரங்களின் காதல், பிரிவு, நினைவுகள் என ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்திய இந்தப் படத்தின் மறுவெளியீடு பழைய ரசிகர்களை மட்டுமின்றி புதிய தலைமுறை ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
