தளபதி விஜய் தற்போது தனது 69வது படமான “ஜன நாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மூன்று கதாநாயகிகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பிரியா மணியின் நடிப்பில் படம் உருவாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் 2026 பொங்கலுக்குள் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

விஜய், தனது 51வது பிறந்த நாளை ஜூன் 22ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதனையொட்டி படக்குழு ரசிகர்களுக்கு ஒரு சிக்ஸர் அப்டேட் கொடுத்துள்ளது. “ஜன நாயகன்” படத்தின் முதல் பாடல் ஜூன் 22 நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த அப்டேட் போஸ்டரில், விஜயின் பின்னால் சூரியன் உள்ளபடி உருவாக்கப்பட்டிருப்பதால், முதல் பாடல் சமூக அரசியல் கருத்துக்கள் அடங்கியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஜன நாயகன்” திரைப்படம் வெளியானதும் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். திரைப்படத்துக்கு வெளிநாட்டு உரிமம் ரூ.75 கோடியில் இருந்து 80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவே அதிக விலைக்கு விற்பனையான படம் என குறிப்பிடப்படுகிறது.
இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறாரா அல்லது விஜய் பாடியிருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. சிலர் இருவரும் இணைந்து பாடியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்த அப்டேட் தளபதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.