தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, தென்னிந்திய திரைப்படத் துறையில் சில புதிய பட வாய்ப்புகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். அவர் தனது நீண்டகால காதலரான பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை மணந்தார், மேலும் அவரது சகோதரி சகுன் பன்னுவுடன் ஒரு புதிய வீட்டை வாங்கியுள்ளார். அவர்கள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் கார்பெட் பரப்பளவு 1,390 சதுர அடி மற்றும் கட்டப்பட்ட பகுதி 1,669 சதுர அடி.
2 கார்களுக்கு பார்க்கிங் வசதி உள்ளது. ரூ.4.33 கோடி மதிப்புள்ள இந்த வீடு ரூ.21.65 லட்சத்திற்கு பதிவு செய்யப்பட்டது. 15-ம் தேதி பத்திரப் பதிவின் போது, பதிவு கட்டணமாக ரூ.30,000 செலுத்தினர். இந்த குடியிருப்பு மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள இம்பீரியல் ஹைட்ஸில் அமைந்துள்ளது. இது அந்தேரிக்கும் மலாட்டிற்கும் இடையில் உள்ளது.

மும்பையின் புறநகர் ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட பகுதி என்பதால், இம்பீரியல் ஹைட்ஸில் பல தொழிலதிபர்கள் வீடுகளை வாங்கியுள்ளனர். ஏப்ரல் 2024 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இந்தப் பகுதியில் 47 சொத்துக்கள் விற்கப்பட்டதாகவும், மொத்தம் ரூ.168 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டாப்ஸி இந்தித் திரைப்படத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் என்பதால், அவர் ஒரு புதிய வீட்டை வாங்குவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.