சென்னை: ஜிவி பிரகாஷ் குரலில் பிரபுதேவா மகனின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவின் மகனான ரிஷி தேவா நடனத்தில் புது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் பிரபுதேவா. அவர் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள மூன்வாக் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பிரபுதேவாவின் மகனான ரிஷி தேவா நடனத்தில் புது வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் பாடல் பாடியுள்ளார். இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.