By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பிபா உலகக்கோப்பை கால்பந்து… பள்ளிகளுக்கு 40 நாட்கள் முன்கூட்டியே விடுமுறை!
    1 Min Read
    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கை – 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது!
    1 Min Read
    9 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனா செல்லும அமெரிக்க அதிபர் டிரம்ப்!
    1 Min Read
    பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டிஜிட்டலில் நடக்கும் நூதன மோசடி… விழித்துக் கொள்ளுங்கள்
    3 Min Read
    இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பது எப்படி ?
    1 Min Read
    எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்
    1 Min Read
    நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
    1 Min Read
    பெட்ரோல் விலையை கட்டுக்குள் இந்தியா வைத்திருப்பது எப்படி?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடும் இடுப்பு வலிக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இலுப்பை எண்ணெய்
    2 Min Read
    விபத்து காப்பீடு எடுப்பதற்கு முன்பாக கவனிக்க வேண்டியவை
    1 Min Read
    உடற்பயிற்சி செய்த பின்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் ?
    1 Min Read
    கருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
    1 Min Read
    தஞ்சாவூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தூய்மையான அன்பை பார்க்கிறேன்… நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > தூய்மையான அன்பை பார்க்கிறேன்… நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
சினிமா

தூய்மையான அன்பை பார்க்கிறேன்… நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

Nagaraj
Last updated: May 13, 2026 3:30 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ஐதராபாத்: ஹைதராபாத் வரும் போதெல்லாம் தூய்மையான அன்பைப் பார்க்கிறேன். 28 வருடங்களாக அது மாறவே இல்லை. இதற்கெல்லாம் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்புவீரபத்ருடு’ பட Pre-Release நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய சூர்யா, “ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஹைதராபாத் வரும் போதெல்லாம் தூய்மையான அன்பைப் பார்க்கிறேன். 28 வருடங்களாக அது மாறவே இல்லை. இதற்கெல்லாம் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எனக்கு தெலுங்கு அவ்வளவு நன்றாக தெரியாமல் இருக்கலாம், ஆனால் தெலுங்கு மக்களின் மனது தெரியும்.

ஆர்.ஜே.பாலாஜியின் இந்தப் பயணத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. என்னால் இந்த வாழ்க்கையில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். ஆனால் அவருக்கு பல திறமைகள் உண்டு. ஆர்.ஜே. முதல் இயக்குநர் வரை பல வேலைகளைச் செய்திருக்கிறார். அவர் ஒரு நல்ல நண்பர், நல்ல தந்தை, நல்ல தலைவரும்கூட. அவருடன் நேரம் செலவிடுவது எனக்குப் பிடிக்கும். சிரிப்போ, எமோஷனோ அதனை மிகச் சரியாக வாங்குவார்.

இப்படத்தின் கதையை 40 நிமிடங்கள் மட்டுமே கேட்டுவிட்டு உடனே சம்மதித்தேன். கதை கேட்டபோது எங்கள் அறையில் கருப்பசாமியும் இருந்தார் என அடிக்கடி சொல்வேன். எங்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, அங்கெல்லாம் மேஜிக் நடக்கும்.

அவர் அதை நம்பினார். நானும் கடவுள் நம்பிக்கை உள்ள நபர்தான். ஆனால் எனக்குப் பிரச்னை வந்தால்தான், கடவுளை நோக்கிச் செல்வேன். ஆனால் ஆர்.ஜே.பாலாஜி செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளின் கரமும் இருக்கும். அதனால்தான் இந்தக் கதையை மிக நேர்த்தியாக இவர் கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி நல்ல கோர்ட் ரூம் ட்ராமாவாக இருக்கும், இரண்டாம் பாதி மாஸ் ஆக இருக்கும். அந்த ஓர் உறுதியை நான் இப்போது கொடுக்கிறேன்”என்றார்.

You Might Also Like

உங்களுக்கும் சீக்கிரம் நல்ல முதல்வர் கிடைக்க வாழ்த்துக்கள்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சொன்னது எதற்காக?

செப்டம்பர் மாதம்தான் ஜெயிலர் 2 ரிலீசாம்… ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்

2 நாட்கள் சிறப்பு காட்சி திரையிட்டுக் கொள்ள சூர்யா படத்திற்கு அனுமதி

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஆலியா பட்

8 ஆண்டுகள் நிறைவு… நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி எதற்காக?

TAGGED:Actor SuryaBlack FilmdramaHyderabadMassPure Loveகருப்பு திரைப்படம்ட்ராமாதூய்மையான அன்புநடிகர் சூர்யாமாஸ்ஹைதராபாத்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கடும் இடுப்பு வலிக்கு சிறந்த தீர்வை அளிக்கும் இலுப்பை எண்ணெய்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?