சென்னை: நம் அனைவருக்கு செட்டிநாடு சிக்கன் என்றால் பிடிக்கும். இந்த பதிவில் ஹோட்டல் ஸ்டைலில் படு டேஸ்ட் ஆன செட்டிநாடு சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட சிக்கன் – 1/2 கிலோ
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ் ஸ்பூன்
பெ. வெங்காயம் – 2
கருவேப்பிலை – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1டீஸ் ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை – சிறிது
மிளகு – 1/2 டீஸ் ஸ்பூன்
வரமிளகாய் – 3
சீரகம் – 1/2 டீஸ் ஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ் ஸ்பூன்
உப்பு – தே.அளவு
செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, பெ. வெங்காயம், கருவேப்பில்லை, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் சிக்கனை அதில் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் கடாயில் ஏலக்காய், கிராம்பு, பட்டை,மிளகு, வரமிளகாய், சீரகம், மல்லி சேர்த்து வறுக்கவும். பின்னர் இதை மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலாவை அதில் சேர்க்கவும். பின்னர் இதில் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான செட்டிநாடு சிக்கன் வறுவல் ரெடி.