சத்துக்கள் நிறைந்த சுவையான பேரிச்சைபழம் பாயாசம் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 20
பால் – 2½ கப்
முந்திரி -10
பாதாம் – 10
நெய் -தேவையான அளவு
உலர்ந்த திராட்சை -10
ஏலக்காய் – 4
செய்முறை:
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு பழத்தை ஊற வைத்த பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு 2 கப் பாலை பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இதே நேரத்தில் தேவையான அளவு நெய் விட்டு முந்திரி, பாதாம் பொன்னிறமாக வறுத்து பாலில் சேர்க்கவும்.
பிறகு ஏலக்காய் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்தால் சுவையான பேரிச்சை பழம் பாயாசம் ரெடி.