சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பயத்தம் பருப்பு புட்டு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 2 கப்
சக்கரை – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
பயத்தம் பருப்பு – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை : பயத்தம் பருப்பு குழையாமல் வேக வைத்து இறக்கவும். பின்னர் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து ஈரமாவாக அரைத்து பாத்திரத்தில் மணல் பதத்திற்கு வறுக்கவும். பின்னர் உப்பு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசிறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வேக வைத்து எடுத்த புட்டு பாத்திரத்தில் வேக வைத்து பயத்தம் பருப்பு, சர்க்கரை, தேங்காய்ப்பூ , நெய் கலந்து பரிமாறவும்.