சென்னை : குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி ஏதாவது செய்து கொடுத்து அசத்தலாம். அந்தவகையில் இப்போது சிம்பிளான பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
பப்பாளி பழம் – 1
சர்க்கரை – 3/4 கப்
நெய் – 100 மில்லி
பால் – 100 மில்லி
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை: முந்திரி, பாதாம் பருப்பை பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு பச்சை வாடை போனதும் வதக்குங்கள். இதில் பாலை ஊற்றி குழையும் வரை வேகவிடவும். இதில் சர்க்கரை சேர்த்து அல்வா சுண்டிவரும் வரை கிளறவும்.
இறுதியில் முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கினால் பப்பாளி பழ அல்வா ரெடி.