தேவையான பொருள்கள் :
முந்திரிப் பருப்பு
தேங்காய்
சர்க்கரை
நெய் தேவையான அளவு
தண்ணீர் சிறிது
செய்முறை :
முதலில் முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். இப்போது ஊற வைத்த முந்திரிப் பருப்பை நன்கு துருவிய தேங்காய் உடன் வைத்து நன்றாக அரக்க வேண்டும்.. இந்த கலவை நன்கு சேர்ந்து கெட்டியாக வெண்ணெய் வரும் வரை அரைக்க வேண்டும்.. . இப்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போல அரைத்த அந்த விழுதை சர்க்கரையுடன் சேர்த்து விடாமல் கிளறவும். (அடிப் பிடிக்கக் கூடாது. எல்லாமே ஒன்றாக சம அளவில் சேரும் படி கிண்ட வேண்டும். கிண்டுவதில் தான் விஷயம் உள்ளது)
பின்னர் இரண்டு ஸ்பூன் நெய்யை விட்டு மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும். இப்படியாக சுமார் இருபது நிமிடங்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் மேற்கண்டவற்றை கிண்டி நன்கு பூத்து வரும் சமயத்தில் நெய் தடவிய அகன்ற பாத்திரத்தில் கொட்ட வேண்டும்.. தன் பின்னர் அந்த கலவையை குட்டி குட்டி துண்டுகளாக வெட்டலாம்.. 6. இதோ இப்போது சுவையான முந்திரிப் பருப்பு கேக் அல்லது காஜு கட்லி தயார்.