தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1/4 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்
முந்திரி – 10 (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அவலை சேர்த்து 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்து, தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே ஜாரில் பொட்டுக்கடலை, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு பொடி செய்து, அதை அவல் பொடியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதை அப்படியே அவல் பொடியில் ஊற்ற வேண்டும். பிறகு அதில் சிறிது பாலை ஊற்றி, கையால் நன்கு கிளறி, அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்தால், சுவையான அவல் லட்டு தயார்.