வங்காளதேசம்: ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியில் ஷர்மின் சுல்தானா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
15 வீராங்கனைகள் கொண்ட அணியை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த தாஜ் நெஹருக்குப் பதிலாக ஷர்மின் சுல்தானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீராங்கனைகள் வரிசையில் கூடுதல் அனுபவம் தேவைப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
வங்காளதேச அணி ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தோனேசியாவுக்கு எதிராக ஆசியக் கோப்பை தொடரை தொடங்குகிறது. தொடர்ந்து இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளை எதிர்கொள்கிறது.
