உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் ‘பி’ பிரிவில் நடந்த லீக் போட்டியில், கத்தார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து, உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துதது கனடா. அந்த அணியின் ஜோனாதன் டேவிட் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து மிரட்டினார். 16வது நிமிடத்தில், கனடாவின் சைல் லாரின் தனது அணிக்காக முதல் கோல் அடித்தார். கனடா அணியின் நட்சத்திர வீரர் ஜோனாதன் டேவிட், கத்தார் கோல் கீப்பருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.