இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் அறிமுகமாயிள்ளார். இதற்கு முன் அவர் மூன்று ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இந்தியக்காக விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்த சாய், முதல் தர கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் 1957 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஏழு சதங்கள், ஐந்து அரைசதங்கள் அடங்கும்.

இந்த பின்புலத்தில் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவம் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும், சாய் அறிமுகமான ஜூன் 20 தேதி தான் விராட் கோலி, ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய கிரிக்கெட் வீரர்களும் தங்கள் டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய தேதியாகும்.
இந்தப் பின்னணியில், சாய் சுதர்சனும் இனி இந்திய கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த ஐபிஎல் சீசனில் அவர் 759 ரன்கள் எடுத்தார். அவரின் தொடர்ச்சியான சாதனைகளால் தான் இந்த தேர்வு ஏற்பட்டதாக அஜித் அகார்கர் விளக்கியுள்ளார்.
இந்த வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்த போட்டியில் இடம் வழங்கப்படவில்லை. சாய் டெஸ்ட் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் நிரூபித்த திறமையல் அவர் முன்னுரிமை பெற்றார். இந்த அறிமுகம் அவரது பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.