கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று 28வது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் – கொல்த்தா அணி இடையே போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது. நடப்பு சீசனில் கொல்கத்தா அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மறுபுறம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை அபாரமாகத் தொடங்கியது. முதல் 4 ஆட்டங்களில் சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு என ஜாம்பவான் அணிகளை வீழ்த்தியது.
ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி சற்று முன்னிலையில் உள்ளது. கொல்கத்தா 16 முறையும் ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.