டெல்லி யஷோபூமியில் 10-வது இந்தியா மொபைல் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
5ஜி, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், குவாண்டம் தகவல் தொடர்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் கண்காட்சியாளர்கள், 600 ஸ்டார்ட்அப்கள் பங்கேற்றுள்ளன.
