லக்னோ: 4 பயங்கரவாதிகள் கைது… உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை இணைந்து நடத்திய சோதனையில் மெஹ்காப், ககன்தீப் சிங், ஷாரூக் மற்றும் முஷாரப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனைகள், அரசியல் கட்சி அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகியை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மெஹ்காப் மற்றும் ககன்தீப் சிங் இலக்கு இடங்களை நேரில் சென்று உளவு பார்த்ததாகவும், ஷாரூக் மற்றும் முஷாரப் சமூக வலைதளங்கள் மூலம் குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட ரகசிய தகவல்கள் பாகிஸ்தானில் உள்ள ‘தாதா பாட்டி’ என்ற நபருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரது நெட்வொர்க் மூலம் ஆயுதங்கள் கிடைத்தவுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.