புதுடில்லி: காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்திய எல்லை பகுதியில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.