நாசிக்: தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாசிக்கில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பி.பி.ஓ., அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கடந்த பிப்ரவரியில் புகார் எழுந்தது. இதையடுத்து உண்மை நிலவரத்தை கண்டறிய நாசிக் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இதன்படி, அந்த அலுவலகத்திலேயே துாய்மை பணியாளர்களாக நான்கு பெண் போலீசார் உட்பட பலர் பணியில் சேர்ந்தனர்.இந்த ரகசிய விசாரணையில், தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகருடன் குற்றஞ்சாட்டப்பட்ட டி.சி.எஸ்., நிறுவன ஊழியர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கைதான, ‘டீம் லீடர்கள்’, சக ஊழியர்களை முஸ்லிம் நடைமுறைகளை பின்பற்றும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது. இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட மனித வள மேலாளரான நிடா கான் தலைமறைவானார்.