புது டெல்லி: பலத்த காயம்… பிரபல யூடியூபரும் பிக்பாஸ் 17 நிகழ்ச்சியின் போட்டியாளருமான அனுராக் டோவல் கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இருந்துகொண்டே காரை அதிக வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. சுமார் 150 கிமீ வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் அனுராக் டோவல் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த இளம் யூடியூபர் இப்படிப்பட்ட முடிவை எடுத்தது ரசிகர்களையும் நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்களால் நீண்டநாட்களாக மனஅழுத்தம் மற்றும் தொந்தரவு சந்தித்து வருவதாகவும், குறிப்பாக தனது திருமணத்திற்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் தன்னை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக தனிமைப்படுத்தியதாகவும் அவர் முன்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.