சென்னை: கர்ப்ப காலத்தில் நீங்கள் உங்களையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் ஆரோக்கியத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
உணவுக்கட்டுப்பாடு என்றதும். மிகத்தீவிரமான டயட் என்று நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இது மிகவும் எளிமையானது தான். கர்ப்பமானதும், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்யப்பட்டதும் இதையெல்லாம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது பாப்பாளிப் பழம் சாப்பிடவே கூடாது என்று மிரட்டி வைத்திருப்பார்கள். அது ஏன் தெரியுமா? பப்பாளியை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உங்களின் டெலிவரி தேதிக்கு முன்னரே பிரசவம் நடப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது குழந்தைக்கு நல்லதல்ல. கர்ப்பமான மூன்று மாதத்திற்குள்ளும், கடைசி மாதத்திலும் பப்பாளியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
அன்னாசிப்பழத்தில் அதிகப்படியான ப்ரோமிலைன் இருக்கும். இவை கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. முதல் ட்ரைம்ஸ்டரில் அன்னாசிப்பழம் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். ஆரம்ப கட்டத்தில் அன்னாசிப்பழ சாப்பிட்டால் கருக் கலைந்திடும்.
கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகையை தடுக்க பழங்களை நிறைய சாப்பிடச்சொல்வார்கள். அப்படி சாப்பிடும் போது கண்டிப்பாக திராட்சையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதனை இன்றோடு விட்டு விடுங்கள். ஆம், கர்ப்பிணிப்பெண்கள் திராட்சை சாப்பிடக்கூடாது. அதில் ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப் பட்டிருக்கும் என்பதை விட, திராட்சையில் இருக்கும் அதிக அமிலத்தன்மை உங்களை பாதித்திடும்.
நம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய் இது. தினமும் அரை கத்திரிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்து. அதோடு கத்திரிக்காயில் இருக்கும் சத்து, மாதவிடாயை வரச் செய்திடும். இதனால் கர்ப்பத்தின் போது இந்தக்காய் சாப்பிடக்கூடாது.
கர்ப்பிணிகள் பெருஞ்சீரகம் மற்றும் மல்லி விதைகளை தவிர்ப்பது நல்லது. இவை அதிகமானால் ஆபத்தையே ஏற்படுத்திடும். இது நம் உடலில் ஃபைட்டோ ஈஸ்ட்ரஜனை அதிகப்படுத்திடும். இதனால் கர்பப்பை வலுவிழக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறந்த பிறகு இதனை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு இது உங்கள் கர்பப்பையை சுத்தப்படுத்திடும்.
ரத்த சோகை இருப்பவர்களுக்கான மருந்து எள். அதனை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சிலருக்கு இது கருக்கலைப்பை ஏற்படுத்திடும். கர்பப்பையின் தசைகளை தளர்த்திடும். முதல் ட்ரைம்ஸ்டரில் இதனை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்திடல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் தாரளமாக நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடலாம்.