May 3, 2024

இதை செய்தால் உடல் எடை வெகுவாக குறையும்

உடல் எடையைக் குறைக்கும் பயணத்தைத் தொடங்கும்போது உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, எல்லாவற்றிலும் மாற்றம் தேவை.ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது, கூடுதல் கொழுப்பு மற்றும் எடையைக் குறைப்பது மற்றும் உடலைக் கச்சிதமாக வைத்திருப்பது முக்கியம். இந்த காலக்கட்டத்தில் நம்மில் பலர் உடல் உழைப்பு இல்லாத, ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு அதிகம் பழகியிருப்பதால் உடல் எடை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் எடை இழப்பு என்பது மிகவும் சவாலானதாக மாறிவிடுகிறது. எடைக்குறைப்பு ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் மேம்படுத்துகிறது மற்றும் சீரமைக்கிறது. உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை என அனைத்தையும் ஒழுங்குபடுத்துவது கொழுப்பைக் குறைக்கும் பணியில் உதவுகிறது. இதை பராமரிக்க ஒரு முறையான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இந்த மாற்றத்தில் உங்கள் நாளை எப்படி தொடங்குவது என்பதும் முக்கியம்.

எடையை வேகமாக குறைக்க தினமும் காலையில் உங்கள் நாளை எப்படி தொடங்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.காலை உணவுக்கு முன் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவும். குடிநீர் பசியைக் கட்டுப்படுத்துகிறது, உடனடி பசியைத் தணிக்கிறது மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

உடல் எடையைக் குறைப்பதற்கு காலை உணவு முக்கியமான உணவாகக் கருதப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் காலை உணவைத் தேர்ந்தெடுப்பது உங்கள் நாளின் போக்கைத் தீர்மானிக்கும். அதிக புரதம் நிறைந்த காலை உணவு எடைக்குறைப்பு மிகவும் முக்கியமானது.

ஏனெனில் இது வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் உங்கள் எடையை அதிகரிக்கும் உணவுகளை நோக்கி செல்வதைத் தடுக்கிறது. இது குறைவான எடை அதிகரிப்புக்கும் உதவுகிறது.

முட்டை, கிரேக்க தயிர், பாதாம், சியா விதைகள், பச்சை பட்டாணி வேர்க்கடலை போன்ற பொருட்களை காலை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.காலை நேர உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைக்க உதவும். காலை உணவுக்கு முன் ஒரு நல்ல உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவும். எதை மறந்தாலும் இதனை ஒருபோதும் மறக்கக்கூடாது.

நீங்கள் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால், உடல் ஓய்வெடுக்க தினமும் 7-8 மணிநேரம் நன்றாக தூங்க முயற்சி செய்யுங்கள், இயற்கையாகவே உள்ளிருந்து வரும் தேய்மானங்கள் அனைத்தையும் குணமாக்குவது அவசியம். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது மட்டுமே எடை குறைப்பதில் முழுமையாக உதவாது, இரவில் போதுமான நேரம் தூங்குவதும் முக்கியம்.அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, எனவே தியானம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

இது பராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, சீரான இதயத் துடிப்பு, இரத்த துகர் அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. மைண்ட்ஃபுல் தியானம் உங்களை ஒரு பயனுள்ள நாளுக்குத் தயார்படுத்த உதவுகிறது, இது உங்களுக்கு உதவுவதுடன், உங்கள் எடையைக் குறைக்கும் உங்கள் முயற்சிக்கு ஆற்றலைச் செலுத்த உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!