வயிற்றுப் புற்றுநோய் (Gastric Cancer) என்பது முக்கியமான புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் வயிற்றின் ஓரங்களில், குறிப்பாக Mucus செல்களில் ஏற்படுகிறது. உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்த நோய், பெரும்பாலும் கடைசி நிலைகளில் தான் கண்டறியப்படுகிறது. புற்றுநோய் உறுதியாகப்படும் நிலையில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே உள்ளது.

இந்நோய் ஏற்பட வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் புகைபிடித்தல், மது அருந்துதல், மரபணு பாதிப்புகள் போன்றவை அடங்கும். அதைவிட முக்கியமாக நமது உணவுப் பழக்கங்களும் இதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது, சில உணவுகள் வயிறு புற்றுநோய் ஏற்படவைக்கும், சில உணவுகள் அதனை தடுக்கும். எனவே ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகிறது.
சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி), வைட்டமின் C மற்றும் ஃபிளவனாய்டுகள் கொண்டுள்ளதால், புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தருகின்றன. ப்ரோக்கோலி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலிசின் சேர்மங்கள் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவை எதிர்த்து வேலை செய்கின்றன. மேலும், முழுத்தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் செரிமானத்தை மேம்படுத்தி, நார்ச்சத்து மூலம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன.
அதேபோல், கேடசின் (Catechins) என்ற பாலிஃபீனால்கள் நிறைந்த கிரீன் டீ, செல்களைக் காக்கும் சக்தி கொண்டது. தினமும் 2–3 கோப்பை கிரீன் டீ குடிப்பது வயிற்றுப் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். ஆனால் இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்காமலே குடிக்க வேண்டும். எனவே, உணவுப் பழக்கங்களை சரிசெய்து, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு புற்றுநோயைக் குறைக்கும் வழிகளை நாம் முன்னோக்கி கடைப்பிடிக்க வேண்டும்.