வேக வைத்த வேர்க்கடலையில் புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
வேக வைத்து வேர்க்கடலையை சாப்பிடும் போது, அதில் உள்ள மோனாஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் போன்ற இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் கிடைக்கும். இந்த கொழுப்புக்களை ஒருவர் மிதமான அளவில் எடுத்து வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கும்.
வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ரெஸ்வெராட்ரால் வளமான அளவில் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
பலரும் வேர்க்கடலை உடல் பருமனை அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அதுவும் மிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் பசியுணர்வு குறைவதோடு, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களால் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். எனவே டயட்டில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.
வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ரெஸ்வெராட்ரால் வளமான அளவில் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
எடை இழப்புக்கு உதவும் பலரும் வேர்க்கடலை உடல் பருமனை அதிகரிக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம், அதுவும் மிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் பசியுணர்வு குறைவதோடு, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களால் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். எனவே டயட்டில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.