சென்னை: உடல் எடை அதிகரிக்க கெட்ட கொழுப்பு முக்கிய காரணமாக உள்ளது. கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் பல்வேறு நோய்களும் வரும். உடலில் தேங்கியுள்ள உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்வோம்.
உடலில் அதிகப்படியாக இருக்ககூடிய கெட்ட கொழுப்பினை 10 சதவீதம் வரை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய் பிரச்சனைகளிலிருந்து உங்களைக் காக்கும். கொழுப்பைக் கரைக்க மாத்திரைகளை சாப்பிட தேவையில்லை உங்களுடைய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களே போதுமானது.
கொழுப்பு உணவுகள் என்று எல்லாவற்றையும் தவிர்த்திட முடியாது. கொழுப்பும் உடலின் சீரான இயக்கத்திற்கு அவசியம். கொழுப்பு வகைகளில் இருக்கக்கூடிய சாச்சுரேட்டட் ஃபேட் தான் இதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
வெண்ணைய், எண்ணெய், க்ரீம், கறி போன்ற உணவுகளில் இந்த கொழுப்பு அதிகமிருக்கும். அதனால் எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம்.
மாவுப் பொருட்கள் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இவற்றில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கும் என்பதால் அவை உங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவிடும். மாவுச் சத்து நிரம்பிய காய்கறி மற்றும் பழங்களை தவிர்த்திட வேண்டும்.