சென்னை: மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவிலிருந்து எச்சில் ஊறும். மாம்பழத்தினை அன்றாடம் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அனைவரும் விரும்பும் மாம்பழத்தின் ரகசியங்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். சிலருக்கு மாம்பழத்தினை உட்கொண்ட பிறகு அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற தொல்லைகள் ஏற்படும். அப்படிப்பட்ட ஒவ்வாமை உண்டானால் மாம்பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
பல பழங்களைப் போலவே, பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து சில வியாபாரிகள் விற்கலாம். அதனால் மாம்பழத்தை நன்கு கழுவி, தோலை உரித்து பின்னர் உண்ணலாம். ஏனெனில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் மாம்பழத்தின் வெளிப்புற மேற்பரப்பில் படிந்திருக்கும்
பழுத்த மாம்பழங்களை உண்ண தேர்ந்தெடுக்கும் போது சிராய்ப்பு அல்லது சேதமடைந்த தோலைக் கொண்ட மாம்பழங்களை ஒதுக்கி விடவும். ஏனெனில் அவற்றில் கெட்டுப்போன அல்லது பூஞ்சை தொற்று இருக்கலாம்
மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், அதிக அளவு நார்ச்சத்து உட்கொள்வது, குறிப்பாக உங்கள் உடல்நிலையில் பல தொல்லைகளை உண்டாக்கும்