சென்னை : வயிற்றைக் காக்கும் நார்ச்சத்து பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் சாப்பிடும்போது, நமக்கு மற்றும் நமது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா என இருவருக்கும் சேர்த்து ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அந்த பாக்டீரியாக்கள்தான் நமது செரிமான வேலையை எளிமையாக்கச் செய்து நமது ஆரோக்கியத்தை காப்பாற்றுபவை.
நார்ச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டாலே நமது வயிறு ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் எனவே இதை முறைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடை அதிகரிக்கும் என்ற நோக்கில் நார்ச்சத்து உணவுகளை தவிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.