சென்னை: இரண்டு வாரத்தில் இயற்கை முறையில் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஏலக்காய் ஒன்று போதும் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம்.
உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை குடியுங்கள். இன்று ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
ஏலக்காயில் உடல் எடையை குறைக்க ஏதுவாக மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பல வகை தாதுக்கள் உள்ளது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கபம், வாயு மற்றும் சிறுநீர் வெளியேறுவதும், எரியும் உணர்வு போன்றவற்றை சரி செய்கின்றது. இது தவிர உங்கள் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கிறது.
உடல் எடையை குறைக்கிறது. ஏலக்காய், உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. நீங்கள் இதை பயன்படுத்தினால் உங்கள் உடல் எடை குறைய தொடங்கும்.
ஏலக்காயை உரித்து அதன் விதையை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதனை சூடாக்கி குடிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் உங்கள் எடை வேகமாக குறைய தொடங்கும். 5 முதல் 6 ஏலக்காய் விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். இதை ஒவ்வொரு நாளும் செய்து வர இரண்டு வாரங்களில் நாட்களில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள்.
இந்த நீர் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும். எடையை குறைப்பதோடு அந்த தண்ணீர் குடிப்பது சருமத்தை பளபளப்பாக்கும்.