By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நடுக்கடலில் பயங்கர தீ… பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு
    1 Min Read
    ரஷ்யாவுக்கு பெரும் இழப்பா? 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பலி என மேற்கத்திய உளவுத்துறை தகவல்
    1 Min Read
    பள்ளியில் வாய் தகராறு… கத்திக்குத்தாக மாறிய அதிர்ச்சி சம்பவம்: 2 பேர் படுகாயம்
    1 Min Read
    ரூ.66.91 கோடி போர் விமான கொள்முதல் முறைகேடு? கோத்தபய ராஜபக்சேவிடம் 5 மணி நேர விசாரணை
    1 Min Read
    தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 மணி நேர பரோல்… சின்மயி கிருஷ்ண தாஸின் உணர்ச்சிகரமான தருணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    ‘அன்புப் பெரியோர்களே…’ என்ற குரல் ஓய்ந்தது! சாலமன் பாப்பையா மறைவால் தமிழகம் சோகம்
    1 Min Read
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீசார் பாதுகாப்பு! கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 9 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > 9 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அரசியல் செய்திகள்

9 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

Nagaraj
Last updated: August 14, 2026 10:26 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டுமின்றி, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் கவலையும் பாதுகாப்பற்ற உணர்வும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது வரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசிடம் பேசி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழக மீனவ சமூகத்தினருக்கும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

‘எங்கள் தலைவரைத் தொட்டுப் பேசினால் சும்மா விடமாட்டோம்!’ மேயர் பிரியாவின் ஆவேசப் பேச்சு

உதவியாளர் வீட்டில் ரூ.32 லட்சம், தங்கம் பறிமுதல்? காங்கிரஸ் பொறுப்பில் இருந்து ஹரிஷ் ராவத் விலகல்

‘கோடிகள் கொடுத்தாலும் மக்கள் முடிவு மாறாது!’ திருமங்கலம் பார்முலாவை சாடிய நிர்மல்குமார்

தாராபுரம் இடைத்தேர்தல்: தேர்தல் பணிக்குழுவை அமைத்த தவெக! 11 அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்பு

முதல்வர் விஜய்யின் முதல் வெளிநாட்டு பயணம்

TAGGED:CM VijayFishermen ArrestFishermen IssueJaishankarRamanathapuram FishermenSri Lanka Navyஇலங்கை கடற்படைமீனவர் பிரச்சினைமீனவர்கள் கைதுமுதல்வர் விஜய்ராமநாதபுரம்ஜெய்சங்கர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?