புதுடெல்லி: புதிய தலைவர்கள் நியமனம்… டெல்லி, பஞ்சாப், திரிபுரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு பா.ஜனதா கட்சியின் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இந்த நியமனங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, டெல்லிக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா, அரியானாவுக்கு அர்ச்சனா குப்தா, பஞ்சாப்புக்கு சர்தார் கேவல் சிங் தில்லான் மற்றும் திரிபுராவுக்கு அபிஷேக் தெப்ராய் ஆகியோர் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்.