சென்னை: பாஜக தேசிய தலைவர் அதிருப்தி… தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டதை அறிந்த கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் நடந்த மாநிலங்களில் தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் சென்னை கிண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தமிழகம், கேரளா, புதுச்சேரி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பொதுவாக பாஜக பயிற்சி முகாம்கள் பள்ளி, கல்லூரி அல்லது மைதான வசதி உள்ள மண்டபங்களில் நடைபெறும். ஆனால் இம்முறை கருத்தரங்கம் போல ஹோட்டலில் நடைபெற்றது குறித்து சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பயிற்சி முகாம்கள் வழக்கமான நடைமுறையின்படி நடத்தப்பட வேண்டும் என்றும், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்துவதால் பயன் இல்லை என்றும் நிதின் நபின் கண்டித்ததாக கூறப்படுகிறது.