குப்பம்: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சொந்த தொகுதியான குப்பத்துக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குப்பம் பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 2-வது நாளான நேற்று காலை தனது குப்பம் தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதையடுத்து குப்பம் அரசு கல்லூரியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-
ஆர்ப்பாட்டம் இல்லாத அரசு, மக்களுக்கு நன்மை செய்யும் அரசு என்பதே எனது இலக்கு. ஆந்திரப் பிரதேசம் முற்றிலும் வறுமையில்லா மாநிலமாக மாற வேண்டும். இதற்கான செயல்முறைத் திட்டத்தை எனக்கு விரைவில் வழங்கவும்.
குப்பை கொட்டும் இடத்தில் ரவுடிகள் இருக்கக் கூடாது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
நான் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்களில் ஆட்களை வலுக்கட்டாயமாக சேர்க்க வேண்டாம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.