சென்னை: புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் மக்களுடன் நேரடியாக உரையாட உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதளங்கள் மூலம் நாளை மக்களுடன் நேரடியாக உரையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், அனைவரையும் சமூக வலைதளங்கள் மூலம் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார்.