சென்னை: மின் உற்பத்தி மற்றும் மின் தேவை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், துறை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய அவர், 200 யூனிட் மின்சார திட்டம் குறித்தும் விவாதித்தார்.
மேலும், பள்ளிகள் திறப்பு, பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அதேபோல், திரைத்துறையினர் அண்மையில் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் ராஜ்மோகன், முதலமைச்சருடன் ஆலோசித்தார்.
முன்னதாக, இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பினர் முதலமைச்சரை சந்தித்தனர்.
தமிழக தொழிற்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்பினரும் முதலமைச்சரை சந்தித்தனர்.
தமிழ்நாட்டில் வணிகச் செயல்முறைகளை எளிமைப்படுத்துவது, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்தும் அப்போது கலந்தாலோசிக்கப்பட்டது.