தஞ்சாவூர்: தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை ரூ 5 ஆயிரம் வழங்கியதை தஞ்சாவூரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்
தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகையை தேர்தல் வர உள்ளதால் முடக்கும் வாய்ப்பு இருப்பதால், இன்று ஒரே தவணையாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்கு தலா ஆயிரம் வீதம் ரூபாய் 3 ஆயிரம் மற்றும் கோடை கால சிறப்பு தொகையாக ரூபாய் 2 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 5 ஆயிரத்தை ஒரே தவணையாக தமிழக முழுவதும் ஒரு கோடி 31 லட்சம் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது.
இதை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் திமுக சார்பில் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அணியினர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்