சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே.4) நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எதிரொலி காரணமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (மே.5) ஆலோசனை நடத்தவுள்ளார்.
3 கட்சிகளும் தேர்தலில் தலா 2 இடங்களை வென்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.