By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சத்துணவு ஊழியர்களை பணி நிலைப்படுத்த வேண்டும்… சீமான் வலியுறுத்தல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > சத்துணவு ஊழியர்களை பணி நிலைப்படுத்த வேண்டும்… சீமான் வலியுறுத்தல்
அரசியல் செய்திகள்

சத்துணவு ஊழியர்களை பணி நிலைப்படுத்த வேண்டும்… சீமான் வலியுறுத்தல்

Nagaraj
Last updated: April 16, 2025 3:21 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சத்துணவு ஊழியர்களைப் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் (எண்: 313) வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை வழங்காமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த சத்துணவு ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்வி தடைபடாமலிருக்க பெருந்தலைவர் காமராசர் அவர்கள் 1955-ம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அத்திட்டம் 1982-ம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,95,000 பணியாளர்களுடன் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 65,000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 இலட்சம் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும். அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது அவர்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொடுங்கோன்மையாகும்.

மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்? தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா? என்ற ஐயமும் எழுகிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 1,95,000 சத்துணவுப் பணியிடங்களில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

ஆகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் தயாரிக்கும் பணியையும் சத்துணவுப் பணியாளர்களிடமே முழுவதுமாக ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், தற்போது காலியாகவுள்ள 60,000 சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், பணி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதில் தவறு ஒன்றும் கிடையாது… பிரேமலதா ஆதரவு

சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிட்டால் ஆதரவு: வைத்திலிங்கம் அறிவிப்பு!

பொதுப்பணித்துறையில் புதிய டெண்டர் வழிகாட்டுதல்

தமிழக அரசின் வட்டிச்செலவு ரூ.67,050 கோடி: 5 ஆண்டுகளில் 61% உயர்வு!

TAGGED:Educational QualificationGovernment OrderNutrition StaffPostsSeemanஅரசாணைகல்வித்தகுதிசத்துணவு பணியாளர்கள்சீமான்பணியிடங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு நீரும் வராது: சௌமியா அன்புமணி எச்சரிக்கை!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?