சென்னை: கூட்டணி ஆட்சியில் முதல்முறையாக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய உள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், த.வெ.க. அமைச்சரவையில் விசிக பங்கேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். த.வெ.க. தரப்பில் இருந்து வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்பெற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வி.சி.க. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சரவையில் முதன்முதலாக வி.சி.க. பங்கேற்கிறது என்றும் கூறப்படுகிறது.
வி.சி.க. தரப்பில் வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐ.யூ.எம்.எல். கட்சியில் இருந்து பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜஹான் அமைச்சராக பொறுப்பேற்கிறார். இவர்கள் இருவரது பதவியேற்பு விழா இன்று (மே 22) காலை 09.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறதுதாம்.