சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் தமிழக அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த த.வெ.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் சிலர் துறை சார்ந்த விபரங்கள் தெரியாமல் பேட்டி அளிப்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை சரிசெய்ய துறை வல்லுநர்கள் மூலம் அமைச்சர்களுக்கு நிர்வாகம், திட்ட செயல்பாடு மற்றும் மக்கள் தொடர்பு குறித்த பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாரம் இரு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் செய்தியாளர் சந்திப்புகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.