சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எம் எல் ஏ சாக்கோட்டை அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் – சாக்கோட்டை புறவழிச் சாலை, மற்றும் கும்பகோணம் நீலத்தநல்லூர் பாலம் வரை புதிய சாலை, சாக்கோட்டையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள நாச்சியார் கோவில் வரை இணைப்பு சாலை, அமைத்து தர வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சாலைகளை சீரமைப்பதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு விதத்திலும் பயன்பெறுவர். இதன் மூலம் வியாபாரிகளும் தங்கள் செல்லும் இடங்களுக்கு தடையின்றி விரைந்து செல்ல ஏதுவாக இருக்கும்.
எனவே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி இருந்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மேற்கண்ட சாலைகளை உடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார்.