By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
    டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
    டெல்லியில் போக்குவரத்து சங்கங்கள் 3 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
    1 Min Read
    நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி: தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்!
    1 Min Read
    பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கியபோது ஏர் இந்தியா விமானம் விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாகன கண்காணிப்பு கருவி (VLTD) ஆலோசனை
    1 Min Read
    சுங்கக்கட்டண உயர்வை திரும்பப்பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!
    1 Min Read
    தாயைப் பிரிந்த குட்டி யானை மீட்பு: மீண்டும் சேர்க்கும் பணியில் வனத்துறை தீவிரம்!
    1 Min Read
    ‘எபோலா’ வைரஸ் அச்சுறுத்தல்: சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!
    1 Min Read
    கால்நடை மருத்துவம்: மே 25 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: என்டிஏ கூட்டணி என்னை தத்தெடுக்கும்… ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > என்டிஏ கூட்டணி என்னை தத்தெடுக்கும்… ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்
அரசியல் செய்திகள்

என்டிஏ கூட்டணி என்னை தத்தெடுக்கும்… ராஜேந்திர பாலாஜி சொல்கிறார்

Nagaraj
Last updated: April 7, 2026 5:56 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: சட்டமன்ற உறுப்பினரானால் என்னை எடப்பாடி பழனிச்சாமியும், என்டிஏ கூட்டணியும் என்னை தத்தெடுத்துக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சார வேனில் நின்றபடி ஊர்வலமாகச் சென்று இரட்டை இலைக்குவாக்கு சேகரித்த வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களிடையே பேசியதாவது, “இன்றைய தினம் தமிழ்நாட்டுக்கு போதைக் கலாச்சாரம் வந்து தலை விரித்தாடுகிறது . பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து பல்வேறு வகையான போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. இவற்றையெல்லாம் தடுத்து மாற்றி அமைக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியவில்லை.

தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது. இதனை எல்லாம் தடுக்க, ஒடுக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியான அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சரியாக இருந்தது. விலைவாசிகள் கட்டுக்குள் இருந்து. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். வியாபாரிகள் நிம்மதியாக இருந்தனர். இன்றைக்கு அனைத்து தொழில் வளங்களும் இல்லாமல் போய்விட்டது. எனவே அனைத்து தரப்பினர்களும் கஷ்டப்படுகின்ற நிலைமை மாறி, சட்டம் ஒழுங்கு சரி செய்யப்பட வேண்டும்.

திமுக கூட்டணியைச் சார்ந்தவர்கள் பொய்யான வாக்குறுதிகளை, வதந்திகளைச் சொல்லி உங்களிடையே வருவார்கள். நான் கட்சியிலும், அரசியலிலும், மக்கள் பிரதிநிதியாகவும், பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்காக பணியாற்றி உள்ளேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் நல்லாட்சியான அதிமுக ஆட்சி தமிழகத்தில் வர வேண்டுமென்றால் அதிமுக 210- தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். பலமான அதிமுகவுடன் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகள், பலம் வாய்ந்த அமைப்புகள் உள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணி தான் நாட்டை ஆளுகின்ற கூட்டணி.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக போகிறார். உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் அதிகாரம் மிக்க பொறுப்பில் நான் உருவாவேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியும், என்டிஏ கூட்டணியும் என்னை தத்தெடுத்துக் கொள்வார்கள். விருதுநகர் மாவட்டத் தை நிரந்தரமான தொழில் பிரச்சனை இல்லாத மாவட்டமாக உருவாக்குவேன்.

விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு,தீப்பெட்டி, அச்சு மற்றும் அதன் சார்பு தொழில் நிறுவனங்கள், விவசாயம், நெசவு போன்ற அனைத்து தொழில்களையும் பாதுகாக்க என்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்து என்றென்றும் உங்களுக்காக உழைப்பேன்” என்றார்.

You Might Also Like

“திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்” – பிரேமலதா விஜயகாந்த் உறுதி

“மக்களோடு மக்களாகப் பணியாற்றவே துறை மாற்றம் கோரினேன்” – செங்கோட்டையன் விளக்கம்!

தி.மு.க துணை பொதுச்செயலாளர் ராஜா மீது போலீசில் மனு

பசு, ஒட்டகங்களை பலியிட டில்லி அரசு தடை – விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

“பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை” – கோவையில் வைரலாகும் அண்ணாமலை ஆதரவு போஸ்டர்கள்!

TAGGED:agriculturededicationFormer MinisterIndustrial enterprisessecurityVirudhunagarweavingஅர்ப்பணிப்புதொழில் நிறுவனங்கள்நெசவுபாதுகாப்புமுன்னாள் அமைச்சர்விருதுநகர்விவசாயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

கருப்பு படம் பார்க்கும் போது சாமி ஆட பணம் கொடுக்கவில்லை… இயக்குனர் விளக்கம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?