சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த பாதுகாப்பு?
அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறியது சர்ச்சையானது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்கள் உட்பட 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.