சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். “ஏற்றுமதி பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்; செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.