சேலம்: சாராயத்தால் இறந்தால் ரூ.10 லட்சம், விவசாயி இறந்தால் ரூ.1 லட்சமா? என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் ரூபாயும், விவசாயியோ, பட்டாசு ஆலை தொழிலாளர்களோ இறந்தால் ஒரு லட்சம் ரூபாயும் தரும் அரசு யாரை ஊக்குவிக்கிறது என்பது இதன் மூலமே தெரிகிறது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அ.தி..முக ஆட்சியில் எங்காவது கள்ளச் சாராய பலி நடந்ததா ? என்றும் கேள்வி எழுப்பினார்.