By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முடி குறைவாக இருக்கா… அப்போ இந்த ஹேர் பேக் உங்களுக்கு உதவும்
    2 Min Read
    குதிகால் வெடிப்பை சரி செய்ய உங்களுக்கு சிறந்த யோசனைகள்
    1 Min Read
    வெள்ளை முடி பிரச்னை தீர எளிய யோசனைகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    முகம் பளிச்சென்று பொலிவாக இருக்க வாழைப்பழத் தோல் உதவும்
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவுகிறது பேரீட்சை பழம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அரசியல் அதிகாரத்தை பறித்த ஸ்டாலினை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்… அன்புமணி விமர்சனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அரசியல் அதிகாரத்தை பறித்த ஸ்டாலினை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்… அன்புமணி விமர்சனம்
அரசியல் செய்திகள்

அரசியல் அதிகாரத்தை பறித்த ஸ்டாலினை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்… அன்புமணி விமர்சனம்

Nagaraj
Last updated: April 19, 2026 6:47 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அரசியல் அதிகாரத்தைப் பறித்த மு.க.ஸ்டாலினை மகளிர் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக அன்புமணி பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்பைத் தட்டிப் பறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதை தனது பெருமையாகக் கூறிக் கொண்டு தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

எட்டப்பர்களை விஞ்சும் அளவுக்கு துரோகங்களையும், நயவஞ்சகங்களையும் செய்து விட்டு, அவற்றை வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற வெற்றியைப் போல காட்டிக் கொள்வது மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.

மு.க.ஸ்டாலின் அவர்களே…. மாய உலகிலிருந்து இறங்கி வாருங்கள். நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும் நன்மை செய்யவில்லை; மாறாக, மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தைச் செய்திருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக கனவாகவே இருந்து வந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33% இடங்களை மகளிர் அலங்கரிப்பதற்கான வாய்ப்பு கைக்கூடி வந்த நிலையில், அதைக் கெடுத்த பாவத்தை தான் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்.

துரோக மாலைகளை பூமாலைகளாக சூடிக் கொள்வதால் மு.க.ஸ்டாலின் செய்த பாவம் புண்ணியமாகி விடாது. அதற்கான தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது. திமுகவும் சரி…. மு.க.ஸ்டாலினும் சரி… எந்தக் காலத்திலும் பெண்களை உணர்வு உள்ள உயிராக மதித்ததே இல்லை. அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதையும், உரிமைகளை காவு கொடுப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டிருந்தால் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டுக்கு 20 பெண் மக்களவை உறுப்பினர்களும், 2031- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 117 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கிடைத்திருப்பார்கள்.

அந்த வாய்ப்பைச் சீரழித்த குற்ற உணர்வு உங்களின் மனசாட்சியை உறுத்தவில்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே? மு.க.ஸ்டாலின் அவர்களாலும் அவர் தலைமையிலான திமுக அரசாலும் தமிழ்நாட்டு பெண்கள் பெற்றது ஏதும் இல்லை… ஆனால், இழந்தது ஏராளம். மது மற்றும் கஞ்சா போதைகளை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அரசை மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதால் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 44,418 குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிராக 62,489 குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இவற்றைத் தடுக்கத் தவறியதற்காக வருந்தாத மு.க.ஸ்டாலின், மகளிருக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தைப் பறித்ததற்காக பெருமைப்பட்டுக் கொள்வது அவரது உணர்வுகளும், எண்ணங்களும் எந்த அளவுக்கு அழுக்கடைந்திருக்கின்றன என்பதையே காட்டுகிறது.

மகளிருக்கு எதிராக மு.க.ஸ்டாலின் செய்த துரோகம் அவரை நிழலாக பின்தொடர்ந்து துன்புறுத்தும். தேர்தல் களத்தில் எங்கெல்லாம் மு.க.ஸ்டாலின் அவர்களையும், அவரது கட்சியினரையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதோ, அங்கெல்லாம் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதாவை ஏன் தோற்கடித்தீர்கள்? என்று பெண்கள் வினா எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

You Might Also Like

மண்ணில் கூட மாசு பட விடமாட்டேன்… சுயேட்சை வேட்பாளரின் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் எம்.பி., ராகுல் வீட்டின் அருகே பாஜக பெண் எம்.பி.க்கள் பேரணியால் பரபரப்பு

சென்னைக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக

திமுகவின் கவனம் எது மீது தெரியுங்களா? பாஜக அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் திருச்சியில் ரோடு ஷோ!

TAGGED:AnbumanibetrayalCriticismharassmentM.K. Stalinwomenஅன்புமணிதுரோகம்துன்புறுத்தும்பெண்கள்மு.க.ஸ்டாலின்விமர்சனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?