இந்தியாவின் அனைத்து மாவட்டங்களும் 5ஜி இணைப்பால் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 5.6 லட்சம் 5ஜி அடிப்படை நிலையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக 6ஜி தொழில்நுட்பத்தில் உலகளவில் முக்கிய பங்காற்ற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. உலகளாவிய 6ஜி காப்புரிமைகள் மற்றும் தரநிலைகளில் குறைந்தது 10 சதவீத பங்கை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
