57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. வரி அதிகாரிகளின் கைது அதிகாரத்தை நீக்கவும், குற்றவியல் நடவடிக்கைக்கான வரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான தொகை தொடர்பான சில நோட்டீஸ்களை வழங்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு இணக்கச் சுமை குறைய வாய்ப்பு உள்ளது.
