தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால், கேரளா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
