By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு
    0 Min Read
    நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!
    1 Min Read
    ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!
    1 Min Read
    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு
    1 Min Read
    காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த இளைஞருக்கு நெதர்லாந்தில் வேலை: குவியும் பாராட்டு!
    1 Min Read
    விநாயகர் சிலை செய்ய முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த இந்து மாணவர்கள்: நெகிழ வைத்த மத நல்லிணக்கம்!
    1 Min Read
    மாணவர்களின் பயோமெட்ரிக் மூலம் 75 வங்கிக் கணக்குகள்: ரூ.50 கோடி சைபர் மோசடி!
    2 Min Read
    கேரளாவில் பயங்கர விபத்து: கார் நொறுங்கி 8 தமிழக மாணவர்கள் பலி!
    1 Min Read
    ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜ் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!
    1 Min Read
    தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
    1 Min Read
    தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மழைக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்!
    1 Min Read
    சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
    1 Min Read
    அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்
தமிழகம்

பட்டுப்புடவைகளின் தரம்… எப்படி வாங்குவது? உங்களுக்காக சில டிப்ஸ்

Nagaraj
Last updated: August 24, 2026 2:28 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை சற்று அதிகம். இதனால் தரமான பட்டுப் புடவையை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். திருமண காரியங்களுக்கு பட்டுப் புடவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருமண வீடுகளில் பட்டுப் புடவை இன்றி திருமணம் நடைபெறாது.

பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள் ஏற்படும். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பட்டுபோல ஜொலிக்கிறது என்பார்கள். ஆனால், பளபளப்பது எல்லாம் நல்ல பட்டுப் புடவை அல்ல. அதனால், வெறும் பளபளப்பை மட்டுமே கருத்தில்கொண்டு புடவையை தேர்ந்தெடுக்க முடிவு செய்யக்கூடாது. பட்டு நூலின் விலை, தயார் செய்வதற்கான கூலி உட்பட செலவுகள் அதிகம். அதனால், ரொம்பவும் மலிவான விலையில் பட்டுப் புடவைகள் தருவதாகச் சொன்னால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில், சிலர் 2,000 ரூபாய்க்கும் குறைவாகப் பட்டுப் புடவையின் விலையைக் கூறுவார்கள். ஆனால், மிகக் குறைந்த அளவு நல்ல பட்டு நூல் கொண்டு தயாரித்த பட்டுப் புடவை என்றாலும் குறைந்தபட்சம் 3,500 ரூபாய்க்குத்தான் விற்க முடியும். இதேபோல, நிறைய டிசைன் உள்ள புடவைக்கு விலையை மிகக் குறைத்துச் சொன்னாலும், அதன் தரம் பற்றி சந்தேகம்கொள்ள வேண்டும்.

சிலர், டிசைனை வைத்து பட்டுப் புடவைக்கு பெயர்கள் வைத்திருப்பார்கள். ஆனால், என்ன பெயர் வைத்தாலும் பட்டு நூல் தரம் ஒன்றுதான். அதனால், பெயரை மட்டும் வைத்து, பட்டின் தரத்தை முடிவு செய்யக்கூடாது. பட்டு என்பது நான்கு வகைகள்தான். மல்பெர்ரி வகைகளே நம் பகுதியில் அதிகம் கிடைக்கக்கூடியது.

பட்டுப் புடவையின் அளவுகளைச் சோதித்து வாங்குவது நல்லது. பொதுவாக, புடவையின் நீளம் சராசரியாக ஐந்தரை மீட்டரும் ஜாக்கெட்டுக்கு 70 சென்டிமீட்டரும் ஆக, 6.20 மீட்டர் இருக்க வேண்டும். அகலம் 47 முதல் 50 இன்ச் இருக்கும். நீளம், அகலம் குறைவான புடவைகளும் விற்பனை செய்யப்படலாம். எனவே, கவனத்துடன் இருப்பது நல்லது.

ஜரிகையில் பிளாஸ்டிக், ஆஃப் ஃபைன், ப்யூர் அல்லது சில்வர் என மூன்று வகைகள் இருக்கின்றன. இவற்றில், சில்வர் ஜரிகைதான் விலை அதிகமானது. சில்வர் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். சில்வர் ஜரிகை ஒரு கிராம் 45 ரூபாய் என்றால், ஆஃப் ஃபைன் ஜரிகை 3 ரூபாய்தான் இருக்கும். அதனால், என்ன வகையான ஜரிகை என்று கேட்டு வாங்க வேண்டும். நல்ல ஜரிகை உள்ள ஆஃப் ஃபைன் பட்டுப் புடவை 10 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு சில்வர் ஜரிகை உள்ள பட்டுப் புடவை 70 ஆயிரம் ரூபாய் வரை ஆகலாம். புடவை முழுக்க ஜரிகை இருந்தால், மற்ற புடவையைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்கும். அதனால் ஜரிகை அதிகமிருந்தும் விலை குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசின் சில்க் மார்க் முத்திரை, ஹேண்ட்லூம் முத்திரை உள்ளிட்டவை இருக்கும் புடவைகளின் தரத்தை நம்பி வாங்கலாம். இவ்வளவும் கவனித்து, வாங்கிய புடவையை, யாரேனும் ‘விலை அதிகம் கொடுத்து வாங்கி ஏமாந்துவிட்டாய்’ எனச் சொனால், அதை நம்பி குழம்பிவிட வேண்டாம்.

மல்பெர்ரி, டஸ்ஸார், எர்ரி, மூகா என நான்கு வகையான பட்டுகள் இருக்கின்றன. இதில் மல்பெர்ரி வகை மட்டுமே, வளர்ப்பு முறையிலான பட்டுப் பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் இழை. மற்றவை அடர்ந்த காடுகளில் உள்ள பட்டுப்பூச்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிவை. தமிழகத்தைப் பொறுத்தவரை, மல்பெர்ரி வகை பட்டே விற்பனையில் கிடைக்கின்றன. மற்ற வகைகள் கிடைப்பது அபூர்வம் விலையும் அதிகம். பட்டு நூலை, எரிக்கும்போது, மெதுவாக எரிந்து, தானாக அணைந்துவிடும். முடி கருகும் வாசனை வரும். அதன் சாம்பல், கறுமையான நிறத்தில், உருண்டு பளிச்சென்று இருக்கும். விரலால் அழுத்தினால், தூள் தூளாகிவிடும்.

 

You Might Also Like

சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!

தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மழைக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்!

சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்

அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

TAGGED:attentionPricesilk sareetraditionwomenகவனம்பட்டுப் புடவைபாரம்பரியம்பெண்கள்விலை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?